வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள பலமிக்க ஹுட் ஹுட் சூறாவளி, யாழ்ப்பாணத்தில் இருந்து வடக்கீழ் திசையில் 900 கிலோமீற்றருக்கு அப்பால் மையம் கொண்டுள்ளது.தற்போது இந்த சூறாவளி இந்தியாவை நோக்கி நகர்கின்ற போதும், அதன் தாக்கம் இலங்கையின் சில பகுதிகளிலும் காணப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வடபிராந்தியத்திலும், இலங்கையின் ஏனைய கடல்சார்ந்த பகுதிகளிலும் கடுமையான காற்று வீசும் என்பதுடன், மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அதிக மழை பெய்யலாம் என்று காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் மழை பெய்யும் வேளையில் அதிக இடிமின்னல் காணப்படும் என்றும், பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது.
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment