அமெரிக்கா- குர்திஸ் போராளிகளுக்கு ஆயுத விநியோகம்

அமரிக்க போர் வானூர்திகள், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடும் குர்திஸ் போராளிகளுக்கு ஆயுதங்களையும் மருத்துவ பொருட்களையும் விநியோகித்துள்ளன

வான்பரப்பில் இருந்து இந்த பொருட்கள் குர்திஸ் போராளிகளுக்கு பொதிகளாக போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் கோபானா நகரில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக குர்திஸ் போராளிகள் தாக்குதல்களை நடத்திவருகின்றனர்

இதேவேளை அமரிக்காவின் வான் தாக்குதல்கள் காரணமாக துருக்கிய எல்லைப்புறத்தில் இருந்து ஐஎஸ் தீவிரவாதிகள் பின்வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இதன்போது அமரிக்க போர் வானூர்திகளால் 135 தடவைகள் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template