பிரான்ஸில் எபோலா பரவும் அபாயம் ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் எபோலா நோய் தாக்குதலால் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இந்நாடுகளுக்கு விமான சேவைகளை தொடர்வதன் மூலம், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸில் எபோலா நோய் பரவும் அபாயம் இருப்பதாக இங்கிலாந்தை சேர்ந்த அறிவியல் அறிஞர் எச்சரிக்கை விடுத்துள்ளார். லைபீரியா, கினியா மற்றும் சியர்ரா லியோனி உள்ளிட்ட மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் எபோலா நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா நோயை தடுப்பதற்கோ குணப்படுத்துவதற்கோ இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட வில்லை. இதனால் ஆயிரக்கணக்கானோர் எபோலா நோய் தாக்குதலில் பலியாகி வருகின்றனர்.


இந்நாடுகளில் எபோலா நோய் தாக்குதல் அதிகரித்ததும் பிரான்ஸ் ஏர்லைன்ஸை தவிர மற்ற நாடுகள் தங்களது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்திவிட்டன. தங்கள் நாட்டை சேர்ந்த எபோலா நோயாளிகளை இங்கிலாந்தின் ஹித்ரு விமானநிலையம் வழியாக பிரான்ஸ் சிகிச்சைக்கு கொண்டு செல்கிறது. இதன்மூலம் இம்மாதம் 24-ம் தேதிக்குள் பிரான்சில் 75 சதவிகிதமும் இங்கிலாந்தில் 50 சதவிகிதமும் எபோலா நோய் தாக்கும் அபாயம் தென்படுகிறது. ஒருவேளை, பிரான்ஸ் விமான சேவை நிறுத்தப்பட்டால், அவற்றின் சதவிகிதம் குறையலாம் என இங்கிலாந்தின் லான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் அறிவியல் அறிஞர் டெர்ரக் கேதெரர் ஞாயிற்றுக்கிழமை லண்டனில் செய்தி வெளியிட்டார்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template