தங்கும் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் வெட்டவெளியில் கடும் குளிரில் தவிக்கின்றனர். இதனால் இலவச தரிசனத்துக்காக வைகுண்டம் காம்பளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேல் பக்தர்கள் காத்திருக்கின்றனர். மலைப்பாதை வழியாக வந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்ட திவ்ய தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டதால் மலைப்பாதையில் வந்த பக்தர்களும், இலவச தரிசன வழியாக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் 300 ரூபாய்க்கான திருமலையில் டிக்கெட் பெறும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற்ற 11 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். திருமலையில் நேற்று ஒரே நாளில் 85,046 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் கூட்டத்தால் இன்றும் இலவச தரிசனத்துக்காக சுமார் 30 மணிநேரத்துக்கு மேலாக காத்திருக்கின்றனர். திருமலையில் பக்தர்கள் கூட்டம் குறையும் வரை இலவச தரிசனத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும். மற்ற தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டதாக தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு தெரிவித்துள்ளார்.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)

Post a Comment