மச்சாளுடன் பாலியல் சில்மிசம் செய்து கொண்டிருந்த அத்தானைத் தட்டிக் கேட்ட பக்கத்துவீட்டு இளைஞனுக்கு அடி

தனது மனைவியின் தங்கையான யுவதி ஒருவருடன் வீட்டின் பின்பகுதியில் நின்று பாலியல்சில்மிசம் செய்து கொண்டிருந்த அத்தானை மதில் பாய்ந்து தாக்கிய இளைஞன் ஒருவா் அந்த அத்தானாலும் மனைவியின் தங்கையாலும் கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று காலை கோண்டாவில் கிழக்குப் பகுதியில் இடம் பெற்றுள்ளது,

கோண்டாவில் கிழக்குப் பகுதியில் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த இளைஞனின் வீ்ட்டுக்கு அருகில் ஆட்டோச் சாரதியாக தொழில் புரியும்  நபா் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் குறித்த வீடு வெளிநாட்டில் வசிப்பவா்களது வீடு எனவும் அந்த வீட்டில் குறித்த சாரதி குடும்பத்துடன்  பல வருடங்களாக அடாத்தாகவே குடியிருப்பதாகவும் தெரியவருகின்றது,

இன்று நடந்த சம்பவம் குறித்து காயமடைந்த இளைஞன் கருத்துத் தெரிவிக்கையில் இன்று காலை தனது பக்கத்து வீட்டில் யுவதி ஒருவர் வாயைப் பொத்திக் கொண்டு கத்துவது போன்ற சத்தம் கேட்டதாகவும் இதனால் தான் மதிலால் எட்டிப் பார்த்த போது பக்கத்து வீட்டுக்காரன் யுவதியுடன் கடும் பாலியல் சில்மிசத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்ததாகவும் இதனால் தான் கத்திக் கொண்டு மதில் ஏறிப் பாய்ந்த போது யுவதியுடன் இருந்த பக்கத்துவீட்டுக்காரன் தானும் கத்திக் கொண்டு வந்து தன்னை விறகு கட்டையால் தாக்கியதாகவும் தெரிவித்தார். அத்துடன் அவனுடன் நின்ற யுவதியும் கத்திக் கொண்டு தன்னைத் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடா்பாக அயலவா்கள் கருத்துத் தெரிவிக்கையில் ‘தமது வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆட்டோச்சாரதியும் தாக்குதலுக்கு உள்ளான இளைஞனும் தொடா் பகையாளிகள் எனவும் இன்று காலை இவா்கள் சண்டைபோடும் சத்தம் கேட்டு அங்கு சென்ற போது ஆட்டோக்காரனின் மனைவியின் தங்கையும் ஆட்டோக்காரனும் இளைஞனை தாக்கிக் கொண்டிருந்ததாகவும், இளைஞன் மதிலேறிப் பாய்ந்து தனது கையைப் பிடித்து இழுத்தாக  குறித்த யுவதி கூறியதாகவும் தெரிவித்தனா். அத்துடன் இளைஞனின் தாயாரும், சகோதரா்களும் அங்கு வந்து ஆட்டோக்கரனின் திருவிளையாடலைத் தெரிவித்து யுவதியின் சத்தம் கேட்டதாலேயே இளைஞன் அங்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளனா்.

தலையில் காயமடைந்த நிலையில் இருந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகத் தெரியவருகின்றது, இதன் பின்னா் ஆட்டோக்காரனுடன்  இளைஞனின் சகோதரா்கள் கடும் தாக்குதலில் ஈடுபட்டு அந்த ஆட்டோக்காரனையும் வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனா். இதே வேளை வெளியே சென்ற ஆட்டோக்காரனின்  மனைவி அங்கு வந்து தனது சகோதரி மீது தாக்குதல் நடாத்தியதாகத் தெரியவருகின்றது. -
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template