தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து சாமுராய் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா ரெட்டி. திமிரு படத்தின் மூலம் புகழ்பெற்றார் அதன் பிறகு வெயில், பள்ளிக்கூடம், காஞ்சீவரம் படங்களில் நடித்தார். விஷால் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானவர் இப்போது அண்டாவ காணோம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆகியிருக்கிறார். நான் நடித்த படங்களுக்கு விருதுகள் தராததால் வெறுத்து சினிமாவை ஒதுக்கினேன் என்கிறார் ஸ்ரேயா.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: மிக குறைவான படங்களில்தான் நடித்தேன். ஆனாலும் தமிழ் நாட்டு ரசிகர்கள் ஒவ்வொருத்தருக்கும் என்னை தெரியும். மீண்டும் நடிக்க கூப்பிடுகிற அளவிற்கு அந்த படங்களில் நான் நடித்திருக்கிறேன். திமிரில் திமிர் பிடிச்ச மதுரைக்கார பொண்ணு, வெயில் படத்தில் வறுமையில் வாடும் தீப்பெட்டி தொழிலாளி, கஞ்சீவரத்தில் ஏழை நெசவாளனின் மனைவி, பள்ளிக்கூடத்தில் கிராமத்து பொண்ணு இப்படி நான் நடிச்ச கேரக்டர் எல்லாமே நான் வாழ்ந்தவை. ஒவ்வொரு படத்தின் போதும் ஏதோ ஒரு விருது எதிர்பார்த்தேன். ஆனால் யாருமே கண்டுக்கல. அதான் நானும் சினிமாவை கண்டுகொள்ளாமல் விலகிவிட்டேன்.
இப்போது அண்டாவ காணோம் படத்தில் நடிப்பதற்கு காரணம் அந்தப் படத்தின் கதை. நான் நடிச்சாத்தான் நன்றாக இருக்கும்னு என்னை தேடிவந்த அந்த இயக்குனரின் நம்பிக்கை. இதற்காகத்தான் மீண்டும் நடிக்கிறேன். அமெரிக்காவில் வாழ்ந்துகிட்டிருந்தவள் திடீர்னு தேனி பொண்ணா மாறணும். பத்து நாள்ல நான் மாறினேன். இப்போ தேனி பொண்ணுங்க என்கிட்ட கத்துக்கணும். தொடர்ந்து நடிக்கிறது பற்றி முடிவு பண்ணல. பார்க்கலாம். என்கிறார் ஸ்ரேயா ரெட்டி.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment