ஹீரோக்கள் பல நேரங்களில் அப்படிப்பட்ட கதை விவாதங்களில் கலந்து கொண்டு அவர்களது கருத்துக்களையும் முன் வைப்பதுண்டு. ஆனால், முன்னணி இயக்குனர்களின் படங்களிலோ, ஹீரோக்களின் படங்களிலோ நடிக்கும் ஹீரோயின்களுக்கு கதையை சொல்வார்களா என்பது சந்தேகம்தான்.
கன்னடத் திரையுலகில் சமீபத்தில் இப்படிப்பட்ட கதை விவாதம்தான் ஒரு பரபரப்பான செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. தமிழில் 'ஹுக்' படத்தில் அறிமுகமான நடிகை சமீபத்தில் ஒரு இயக்குனருடன் காரில் நீண்ட தூரம் பயணித்ததைப் பற்றித்தான் பேசிக் கொள்கிறார்களாம். திருமணமாகி திரையுலகை விட்டு விலகியிருக்கும் அந்த நடிகை ஏன் அந்த இயக்குனருடன் காரில் பயணித்தார் என்பதைப் பெரிய செய்தியாக்கிவிட்டார்களாம்.
ஆனால், நடிகையோ அடுத்து நடிக்க இருக்கும் படத்தைப் பற்றிய கதையை விவாதிப்பதற்காகவே காரில் நீண்ட தூரம் பயணித்தோம் என்று சொன்னாராம். திருமண விவகாரத்தில் நடிகைக்கும் அவரது கணவருக்கும் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டதாகவும் தெரிகிறது. நடிகையைவிட இளையவரான அந்த இயக்குனரும், நடிகையும் நட்பாகப் பழகி வருகிறார்கள் என சாண்டல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment