அக்காவின் பாராட்டு மழையில்நனையும் துளசி நாயர்

'கோ' படத்தில் நடித்த கார்த்திகா, 'கடல்' படத்தில் நடித்த துளசி நாயர் இருவரும், மாஜி நடிகை ராதாவின் கலைவாரிசுகள். இவர்களில் துளசி நாயர் நடித்துள்ள, 'யான்' படம் சமீபத்தில் திரைக்கு வந்திருப்பதையடுத்து, அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக, மும்பையில் இருந்து சென்னை வந்திருந்தார் கார்த்திகா. 

அப்போது, முதல் படமான, 'கடல்' படத்தை விட இதில் தன், தங்கை துளசியின் நடிப்பை பார்த்து வியந்து போனாராம் அவர். உடனடியாக, தங்கையை பாராட்டு மழையில் நனைத்து விட்டாராம்; இதனால், சந்தோஷத்தில் இருக்கிறார், துளசி. இதுகுறித்து அவர் கூறுகையில், 'அக்கா ரொம்ப கண்டிப்பானவர். ஏதாவது தப்பு செய்து விட்டால், அவரை பார்த்து நடுங்குவேன். அப்படிப்பட்ட அக்காவிடம் இருந்து எனக்கு பாராட்டு கிடைத்துள்ளதை, பெருமையாக கருதுகிறேன்' என்கிறார்
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template