சுதந்திரக் கட்சி யின் முக்கிய அமைச்சர்களுடன் பிரிந்து செல்லப் போகும் ,கெலஉறுமய

ஜாதிக யஹல உறுமய முன் வைக்கும் அரசமைப்பு சீர்திருத்த யோச னைகளை அரசு ஏற்றுக்கொள்ளா விட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் முக்கிய அமைச்சர்களுடன் பிரிந்து செல்லப் போவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
ஜாதிக யஹல உறுமய தனது அரசமைப்பு சீர்திருத்த யோசனை களை 14ஆம் திகதி கொழும்பில் வெளி யிடவுள்ளது.

எனினும், அரசு நிறைவேற்று அதி கார ஜனாதிபதி முறையை நீக்குமா என் பது குறித்துத் தனக்கு சந்தேகம் நிலவு தாக தேரர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பல கட்சிகளுடன் பேச்சுகளை மேற்கொண்டு நாட்டுக்குச் சிறந்த எதிர்காலத்தை வழங்கக்கூடிய இந்த யோசனைகளைத் தயாரித்துள்ளோம்.

நாங்கள் ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் இரண்டையும் ஒன்றாக நடத்தவேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளோம். எங்கள் யோசனைகள் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தக்கூடியவை.
அரசு இந்த யோசனைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அரசுக்குள் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 5 அமைச்சர்கள் என்னுடன் இணைந்து அரசிலிருந்து விலகுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template