வெளியாகியது இந்தி நடிகர்கள் நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்

இந்தி நடிகைகள் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தி படங்களுக்கு உலகளாவிய மார்க்கெட் இருப்பதால் வசூலில் சக்கை போடு போடுகின்றன. சமீபத்தில் ரிலீசான பல படங்கள் வசூலில் ரூ. 100 கோடியை தாண்டி உள்ளது.


சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் உள்ளிட்டோர் ஒரு படத்துக்கு ரூ.40 கோடி ரூ.50 கோடி என சம்பளம் வாங்குகிறார்கள். இதனால் கதாநாயகிகளும் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி இருக்கிறார்கள்.



மார்க்கெட் இல்லாத நடிகைகள் குறைந்தபட்சம் ரூ.2 கோடி சம்பளம் பெறுகிறார்கள். முன்னணி நடிகைகள் ரூ.10 கோடி வரை வாங்குகிறார்கள். சம்பள பட்டியிலில் கரீனாகபூர் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ரூ. 10 கோடி சம்பளம் வாங்குகிறார்.


தீபிகா படுகோனே ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் ரூ.9 கோடி. தீபிகா படுகோனே நடித்த பல படங்கள் ஹட்டாகியுள்ளன. இதனால் கணிசமாக சம்பளம் கேட்கிறார்.


கத்ரினா கைப் ரூ.8 கோடி சம்பளம் வாங்குகிறார். இவரும் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் பிரியங்கா சோப்ரா உள்ளார். பிரியங்கா சோப்ரா ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் ரூ.7 கோடியாகும். வித்யாபாலன் ரூ.5 கோடி வாங்குகிறார். ‘த டர்டி பிக்சர்’ படத்தில் கவர்ச்சியாக நடித்த பிறகு இவர் மார்க்கெட் உயர்ந்தது.


கவர்ச்சி நடிகை பிபாசா பாசு ரூ.4 கோடி சம்பளம் வாங்குகிறார். சோனாக்சி சின்ஹா ரூ. 3 கோடி வாங்குகிறார். இவர் தமிழில் ரஜினி ஜோடியாக ‘லிங்கா’ படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.


இந்தியில் ‘குயின்’ படம் மூலம் பிரபலமான கங்கனா ரனாவத் ரூ. 3 கோடி வாங்குகிறார். அனில் கபூரின் மகள் சோனம் கபூர் ரூ. 3 கோடி வாங்குகிறார்
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template