ஐக்கிய தேசியக் கட்சியின் மீது புலி முத்திரை குத்தி அரசாங்கம் மீண்டும் தோல்வியான முயற்சி

எதிர்க்கட்சித் தலைவரின் பிரித்தானிய பயணம் காரணமாகவே ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளின் தடையை நீக்கியதாக அரசாங்க ஊடகங்கள் மேற்கொண்டு வரும் பிரசாரங்கள் முற்றிலும் பொய்யானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளுடன் புரிந்துணர்வுடன் அரசியலில் ஈடுபட்டு வரும் தரப்பினரே ஐக்கிய தேசியக் கட்சியின் மீது புலி முத்திரை குத்தி வருகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மீது புலி முத்திரை குத்தி அரசாங்கம் மீண்டும் தோல்வியான முயற்சியில் இறங்கியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலையீடு காரணமாகவே ஐரோப்பிய ஒன்றியம் புலிகளின் தடையை நீக்கியதாக கூறி அரசாங்கம் பிரசார யுத்தம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தானிய விஜயத்தை அடிப்படையாக கொண்டு அரசாங்கம் இந்த பொய்யை சமூகமயப்படுத்தி வருவதாகவும் கரு ஜயசூரிய வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template