தேசிய தலைவருக்கு ஆதரவை வழங்குவது என ஜாதிக ஹெல உறுமய தீர்மானம்

ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள 7 விடயங்கள் அடங்கிய யோசனைகளை நிறைவேற்றாது ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால், மஹிந்த ராஜபக்ஷவுக்கோ, ரணில் விக்ரமசிங்கவுக்கோ ஆதரவு வழங்காது மூன்றாவது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதை தீர்மானிப்பது ஹெல உறுமயவே என ஜாதிக ஹெல உறுமயவின் உப செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்,

மகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜாதிக ஹெல உறுமயவின் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அரசியல் கலாச்சாரம், அரச நிர்வாகம், சட்டம், நீதி, நல்லாட்சி, புத்தசாசனம், மத விவகாரம், சிங்கள உரிமை, பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட யோசனைகளுக்கு கட்சியின் பிரதிநிதிகள் இதன்போது அங்கீகாரம் வழங்கினர்.

அங்கீகரிக்கப்பட்ட 21 யோசனைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு அவரது நிலைப்பாடு குறித்து கேட்டறியப்பட உள்ளதாகவும் இந்த யோசனைகளை ஏற்றுக்கொண்ட பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்படியில்லை எனில் புதிய தேசிய தலைவருக்கு ஆதரவை வழங்குவது எனவும் ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர், ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷவும் அரசாங்கமும் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை பார்ப்பதற்கு முன்னர் தரையில் இருக்கும் துளைகளை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அரசாங்கம், ஜாதிக ஹெல உறுமய முன்வைத்துள்ள யோசனைகள் உட்பட சகலவற்றையும் உள்ளடக்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்கூட்டியே தேர்தலை நடத்த உள்ளதாகவும் இது நேரத்தை அடிப்படையாக கொண்டது அல்ல. ஜாதகத்தை அடிப்படையாக கொண்டது என அத்துரலியே ரத்தின தேரர் குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறை சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது உட்பட முக்கிய பிரச்சினைகளுக்கு தேர்தலுக்கு முன்னர் தீர்வுகாணப்பட வேண்டும் எனக்கூறியுள் அவர், நியாயமற்ற வகையில் ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கு அதிகளவான நிதி கிடைப்பதுடன் ஏனைய அமைச்சுக்கள் உரிய முறையில் செயற்படுவதில்லை என்றும் அவர் குற்றம் சுமத்துயுள்ளார்.

அரசாங்கம் தாங்கள் கூறுவதை கேட்பதில்லை என்றும் சர்வாதிகாரிகளினால் இயக்கப்படுவதாகவும் பணத்தை சம்பாதிப்பது மாத்திரமே அவர்களின் நோக்கம் என்றும் தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை அறிவிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜாதிக ஹெல உறுமய முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பில் கவனம் செலுத்தினால் அவருக்கு ஆதரவு வழங்க தயார் என அத்துரலியே ரத்தின தேரர் குறிப்பிட்டுள்ளார்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template