பல்கலை மாணவர்கள் தாக்குதலுடன் தொடர்புடைய ஐவர் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் இம்புல்கமுவ பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கோரி சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் பம்பகின்ன சந்தியில் சத்தியாக்கிரம் இருந்து வந்தனர்.

இந்த இடத்திற்குச் சென்ற குண்டர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு சத்தியாக்கிரக பந்தலையும் தீவைத்து எரித்தனர்.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டு ஒருவாரத்திற்குப் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template