இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் அமைதிக்கான நோபல் பரிசு பாகிஸ்தானைச் சேர்ந்த 17 வயது பெண் மலாலாவுக்கும் இந்தியாவை சேர்ந்த கைலாஷ் ச்த்யார்த்திக்கும் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக கைலாஷ் சத்யார்த்தி பாடுபட்டு வருகிறார். 60 வயதான அவர் தற்போது டில்லியில் வசித்து வருகிறார். பச்பன் பச்சாவ் அந்தோலன் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார். 1990இல் இருந்து இது வரை 80 ஆயிரம் குழந்தை தொழிலாளர்களை இவர் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் காந்திய வழியில் மாணவர்களுக்கான கல்விக்காக போரடி வருபவர். பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடி வருவபர் மலாலா. சமீபத்தில் இவர், தலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு இங்கிலாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஆண்டு மலாலாவின பெயர் நோபல் பரிசுக்கு பரிசீலிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்னை தெரசாவிற்கு அடுத்து இந்தியாவிற்கு கிடைத்துள்ள அமைதிக்கான நோபல் பரிசு இது தான். எல்லையில், மோதல்களில் ஈடுபட்டுவரும் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இந்த அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment