நெல்லியடி கரணவாய்ப் பகுதியில் சொத்துக்களைப் பிரித்துத் தருமாறு சண்டையிட்டு தனது பெற்ற தாயை கோடரியால் வெட்டியுள்ளான் மகன். 40 வயதுடைய மகன் தனது தாயான 72 வயதுடைய மூதாட்டியையே இவ்வாறு காயப்படுத்தியுள்ளார்.
குறித்த மகன் ஏற்கனவே சொத்தைப் பிரித்துத் தருமாறு கோரி தாயின் வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான சொத்துக்களை அடித்துச் சேதப்படுத்தியிருந்தார். இருந்தும் தாய் இந்தச் சம்பவத்தைப் பொலிசாருக்குத் தெரியப்படுத்தாது பொறுமையாக இருந்துள்ளார்.
இந் நிலையில் மகன் தாயைக் கொலை செய்யும் நோக்குடன் கோடரியால் தாக்கியதாலேயே தாய் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். பொலிசார் குறித்த மகனைக் கைது செய்து நீதிமன்றில் ஆயா்ப்படுத்திய போது, அவனை 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment