சீனாவில் பூகம்ப பாதிப்பு அதிகம் உள்ள யுன்னான் மாகாணத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
புவேர் நகரில் இன்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6-6 ஆக பதிவாகியி ருந்ததாகவும், 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இது மையம் கொண்டிருந்ததாகவும் சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக மாகாண தலைநகர் குன்மிங்கில் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. பல வினாடிகள் தொடர்ந்து ஆட்டம் கண்டதால், சில வீடுகளின் ஓடுகள் பெயர்ந்து விழுந்தன. பொதுமக்கள் வீட்டை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியில் ஓடிவந்தனர். ஆனால், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதம் இதே மாகாணத்தில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் நிலநடுக்கத்தால் நூற்றுக்க ணக்கானோர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment