ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவைப் போட்டியிட வேண்டாம் என்றும் பொது வேட்பாளரை களமிறக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தன்னை சந்தித்த ரணிலுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. இந்நிலையில் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்காமல் ஐ.தே.கட்சி தனியாகக் களமிறங்கும் எனவும் அதன் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் எனவும் உத்தியோகபூர்வமற்ற செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க லண்டனுக்கு சென்றுள்ளார்.
அங்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை சந்தித்துப் பேசினார். இதன்போதே அவர் இந்த ஆலோசனையை கூறினார் எனவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சந்திப்பின்போது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான தருணம் வந்துவிட்டது எனவும் இதனால் சகல கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதே புத்திசாலித்தனம் என்றும் சுட்டிக்காட்டினாராம் சந்திரிகா. எனவே ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அவர் வென்ற பின்னர் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குமாறும் கூறிய சந்திரிகா அதுவே ரணில் பிரதமராவதற்கு வழிவகுக்கும் என்றும் அறிவுறுத்தினராம்
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment