நித்யானந்தா குரல் சோதனை முடிவு, சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைப்பு

நித்யானந்தாவின் குரல் சோதனை முடிவு, 'சீல்' வைத்த கவரில், சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


பிடதி ஆஸ்ரமத்தில் நித்யானந்தாவின், பெண் சீடராக இருந்த ஆர்த்தி ராவ், பாலியல் பலாத்காரம் செய்ததாக ராம்நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர். தன் உடல், ஆறு வயது சிறுவனுக்கு உள்ளது போன்று தான் வளர்ச்சி அடைந்துள்ளது. பெண்ணுடன் பாலியல் உறவு கொள்ள முடியாது என, நித்யானந்தா கூறியிருந்தார்.


ராம்நகர் போலீசார், நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த, கோர்ட்டில் அனுமதி பெற்றனர். பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில், நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது. நித்யானந்தாவின் குரல் பரிசோதனை, மடிவாளா ஆய்வகத்தில் நடந்தது. இந்த சோதனை முடிவை, 'சீல்' வைத்த கவரில் மடிவாளா ஆய்வக டாக்டர்கள், சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template