கத்தி படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுமலையில் திரையரங்கு உரிமையாளர்களிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் சிவசங்கர், நகரத் தலைவர் யாழ் நடராசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலருடன் சென்று அளித்த மனு விவரம்:
நடிகர் விஜய் நடிப்பில் உருவான “கத்தி” என்ற திரைப்படம் தீபாவளியன்று வெளியாவதாகத் தெரிய வருகிறது. இத்திரைப்படத்தை லைக்கா மொபைல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரனும், இலங்கை அதிபர் ராஜபட்சேவின் மகனும் இணைந்து தொழில் செய்து வருவதாக செய்திகள் வெளிவருகின்றன.
இனப்படுகொலை குற்றவாளி ராஜபட்சேவுடன் தொழில் ரீதியாக நட்புறவு கொண்டுள்ள சுபாஷ்கரன், தமிழ்த் திரையுலகில் முதலீடு செய்வது தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகின் மூலமாகத் தமிழக அரசியலில் ஊடுருவ ராஜபட்சே முயற்சிப்பதாகவும், தமிழகத்தில் இளம் தலைமுறையினர் சிங்கள இனவெறிக்கு எதிராக அணி திரண்டு விடக் கூடாது என்பதற்காகவும் இதுபோன்ற முயற்சிகள் நடப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, கத்தி திரைப்படத்தை திரையிடக் கூடாது. இது, ராஜபட்சேவுக்கு எதிரான கோரிக்கை என்பதை புரிந்து கொண்டு திரையரங்க உரிமையாளர்கள், படத்தை வெளியிடாமல் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment