தேர்தலில் குதிக்கிறது பொதுபல சேனா..!,ஜனாதிபதி யார் ?

ஜனாதிபதித் தேர்தல் அல்ல பொதுத் தேர்தல் ஒன்றையே தாம் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் பயனில்லை என்றும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிக்குகள் அல்லாத தலைவர்களை முன்னிறுத்தி போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

பொதுபல சேனா என்ற பெயரில் அல்லது வேறு சிங்கள பௌத்த கட்சி பெயரில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் கூறினார்.

தமது அமைப்பினால் அறிவிக்கக்கூடி பொது வேட்பாளர் ஒருவரை உள்ளதாகவும் ஆனால் அவரது பெயரை இப்போது கூற முடியாது என்றும் சரியான நேரத்தில் அதனை வெளியிட உள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டார்.

அரசியல் ரீதியில் ஜாதிக ஹெல உறுமயவுடன் இணைந்து செயற்பட முடியும் என்றும் அவர்களது யோசனை திருப்தி அளிப்பதாகவும் நிறைவேற்று ஜனாதிபதி இருக்க வேண்டும் என கருதவில்லை என்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி சரியான ஒருவர் கையில் சென்றடைய வேண்டும் என்றும் தவறானவரிடம் சென்றால் பிரச்சினை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template