சுன்னாகத்தில் குழு மோதல்; ஒருவா் படுகாயம்.

யாழ்.சுன்னாகம் மேற்கு பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் வியாழக்கிழமை (09) இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் வெள்ளிக்கிழம (10) கூறினர்.

சுன்னாகத்தைச் சேர்ந்த 26 வயதான சந்திரசேகரம் வித்தியரூபன் என்பவரே படுகாயமடைந்தார்.

முச்சக்கர வண்டியொன்றில் வந்தவர்களுக்கும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகர்க்கம் கைகலப்பாக மாறியதாக பொலிஸார் கூறினர்.

அத்துடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template