மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்வதற்காக கொண்டு சென்ற பணத்தை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பறித்தனர்

 மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்வதற்காக வங்கியில் இருந்து எடுத்து வந்த ஒரு  இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் மானிப்பாய், மெமோறியல் வீதிக்கு அண்மையில் கடந்த 7 ஆம் திகதி இடம் பெற்றது. மேற்படி சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

இலங்கை வங்கி, யாழ். கிளையிலிருந்து ஒரு இலட்சம் ரூபா பணத்தை வங்கியில் பெற்று துவிச்சக்கர வண்டியின் முன் கூடையில் வைத்து பயணம் ஆரம்பித்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் மானிப்பாயில் வைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது.

இதனால் பாதிப்படைந்த மானிப்பாய், ஆனந்தா வீதியைச் சேர்ந்த ராஜேந்திரன் நிஷாந்தினி (வயது - 29) மானிப்பாய் பொலிஸில் முறையிட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் சுதுமலை வடக்கைச் சேர்ந்த குகன் என்பவரை பொலிஸார் மேலதிக விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template