13ம் திகதி யாழ் தேவி யாழ்ப்பாணம் வருவதில் சிக்கல்?

தொடரூந்து சேவையாளர்கள் போராட்டம் இடம் பெற்று வருகின்ற நிலையில், யாழ்தேவி தொடரூந்து எதிர்வரும் 13ம் திகதி யாழ்ப்பாணம் வரையான தமது சேவையை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

தொடரூந்து திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான தொடருந்து சேவை எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் வேதனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தற்போது தொடரூந்து சேவையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், திட்டமிட்டபடி இந்த சேவையை தொடர முடியுமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் தொடரூந்து சேவைப் புறக்கணிப்பை தொடர்ந்து மேற்கொள்வது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

தொடரூந்து சேவையாளர்கள் சங்கங்களின் ஒன்றியத்தின் அதிகாரிகளுக்கு இடையில் மருதானை தொடருந்து திணைக்கள தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருகிறது.

தொடரூந்து நேரக் கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள், நிலைய பொறுப்பதிகாரிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட 13 பிரிவினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக பெரும்பாலான தொடரூந்து சேவைகள் ஸ்த்தம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template