
குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாளை சனிக்கிழமை 7.00 முதல் வழமையான புகையிரத சேவைகள் யாவும் இடம்பெறும் என அறிவித்துள்ளனர். இதேவேளை, ரயில்வே ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பினால் 36 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ரயில் பிரயாண சீட்டு விநியோகம் தடைப்பட்டுள்ளதால் மாத்திரம், 26 மில்லியன் ரூபா நட்டமும், ஆசன முற்பதிவு மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லுதல் என்பன தடைப்பட்டுள்ளதால், மேலும் 10 மில்லின் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது
ரயில் ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் சம்பளக் கொடுப்பனவு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து மேற்கொண்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. ,
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment