பெரும்பாலான கடற்பிரதேசங்களில் இன்று (19) மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் தொடக்கம் காலியூடாக புத்தளம் மற்றும் கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் மழை பெய்யலாம். தென்மேற்காக காற்று வேறு திசைகளை நோக்கியும் மணிக்கு 20- 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியக்கூறு காணப்படுகிறது என்றும் வானிலை அவதானநிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
பொதுவாக கடல் கடுமையாக இருக்காது என்றும் ஆனால் இடியுடன் காலநிலையின் போது கடலில் அலையின் வேகம் அதிகரித்து காணக்கூடியதாக இருக்கும் என்றும் வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment