வோட்டர்ஸ் ஏஜ் அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்ட வேலைகள் நேற்று ஆரம்பம்!

பத்தரமுல்லை வோட்டர்ஸ் ஏஜ் அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்ட வேலைத்திட்டத்தின் கீழ் 15 மாடிகளை கொண்டதாக பத்தரமுல்லை பகுதியில் ஹோட்டல் தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.



பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த நிர்மாண பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்ககும் நிகழ்வு நேற்று இடம் பெற்றது.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ரொஹான் செனவிரத்ன, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமல் பெரேரா, பாதுகாப்புப் பிரிவின் பிரதானி ஜெனரல் ஜகத் பாலசூரிய உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

182 அறைகளைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ள இந்த ஹோட்டல் தொகுதியில், நீச்சல் தடாகம் ,வாகனத் தரிப்படம் போன்றவையும் உள்ளடக்கப்படும். நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்புடன் சன்கென் லங்கா தனியார் நிறுவனம் இதன் நிர்மாண வேலைகளை பொறுப்பேற்றுள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template