காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தங்களுக்கிடையில் தகவல்களை பகிர்ந்துகொள்ள இணக்கம் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பில் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம, அதன் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெரேராவை கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இன்று(09) சந்தித்தனர்.
ஆணைக்குழுவுக்;கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் கவனஞ் செலுத்தப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் வழங்கப்பட்டுள்ள பணிப்பாணையை அமுல்படுத்துவதற்காக ஆணைக்குழுவால் பின்பற்றப்படும் முறைமைகள், நடைமுறைகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு, பரணகம விளக்கமாக விவரித்தார்.
காணாமல் போனோரின் இரத்த உறவினர்களிடமிருந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவும் குறிப்பிடத்தக்களவு முறைப்பாடுகளைப் பெற்றுள்ளதாக பரணகமவிடம், பெரேரா தெரிவித்தார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்;கு முறைப்பாடுகளை மேற்கொண்டோர் காணாமல் போனோர் ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடுகளை மேற்கொண்டிருக்கலாம் என இதன்போது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
காணாமல் போனோர் தொடர்பாக தங்களிடம் உள்ள தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளுக்கான தீர்வுகளைக் காண்பதற்கு இணைந்து செயற்படவும் மனித உரிமைகள் ஆணைக்குழு, காணாமல் போனோர் ஆணைக்குழு ஆகியவற்றின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment