மனிதன் மரணத்தின் போது மூளையின் செயற்பாடு அடங்கிய 20 முதல் 30 வினாடிகளில் இருதய துடிப் பும் நின்றுவிடும். அதன் பிறகு எதை யும் உணரமுடியாது எனத் தற்போது நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், மனிதன் இறந்த பிறகும் அவன் உயிர்வாழ்கிறான் எனப் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, மனிதனின் மரணத்துக்குப் பிறகு 3 நிமிடங்கள் அவனது நினைவுகள் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு நிபுணர் குழு கடந்த 4 அண்டுகளாக இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி இருதய துடிப்பு அடங்கி, பின்னர் அதில் இருந்து மீண்டு உயிர் பிழைத்த 40 சதவீதம் பேரிடம் கருத்துக் கேட்கப்பட் டது.
அப்போது, இருதய துடிப்பு அடங் கிய பிறகு 3 நிமிடங்கள் தங்களது நினைவலைகள் மற்றும் எண்ண ஓட்டங்கள் இருந்ததாகவும் அதுவே நாங்கள் மீண்டும் உயிர் பிழைக்க காரணமாக இருந்ததாகவும் கூறினர்.
நியூயோர்க் பல்கலைக்கழக உதவி பேராசிரியரும், சவுதாம்ப்டன் பல்க லைக்கழக முன்னாள் ஆராய்ச்சியா ளருமான டாக்டர் சாம்பர்னியா தனது ஆய்வு அனுபவத்தை தெரிவித்துள் ளார்.
மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்டவர்கள் தங்களுக்கு மாய தோற்றம் போன்ற உணர்வுகள் ஏற்பட்டதாக தெரிவித்தனர் -என்றார்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment