குஜராத்தில் மோடியால் பாதிக்கப்பட்டவர்கள் போல் அமைதியாக இருக்க மாட்டோம். இந்தியாவுக்கு பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுக்கும் என்பதை மோடி உணர்ந்துக் கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த மாதம் 19 ஆம் திகதி நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பிலாவல்இ
‘பாகிஸ்தானின் மற்ற மாகாணங்களைப் போல் காஷ்மீர் பகுதியும் பாகிஸ்தானுக்கு சொந்தமானதுதான். ஆகையால் அதில் ஒரு அங்குலம் கூட யாருக்கும் விட்டுத்தர முடியாது’ என கூறியிருந்தார்.
பிலாவல் இவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த அதே மேடையில் முன்னாள் பிரதமர்களான யூசூப் ராசா கிலானி மற்றும் ராஜா பர்வேஸ் அஷரப் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த பேச்சு இந்தியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த கொந்தளிப்பு அடங்கும் முன்னர் இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் நிலவி வரும் தற்போதைய நிலவரம் குறித்து தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிலாவல் பூட்டோ மீண்டும் இந்தியாவை சீண்டிப் பார்த்துள்ளார்.
எல்லைக் கோட்டுப் பகுதியில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் விவகாரத்தில் (காஸா பகுதியின் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துவது) இஸ்ரேலின் போக்கை இந்தியா பின்பற்றுவதாக தோன்றுகின்றது.
குஜராத்தில் மோடியால் பாதிக்கப்பட்டவர்கள் போல் அமைதியாக இருக்க மாட்டோம். பாகிஸ்தானால் தகுந்த பதிலடி கொடுக்க முடியும் என்பதை மோடி உணர்ந்துக் கொள்ள வேண்டும்’ என்று பிலாவல் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளார்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment