தென் கடற்பரப்பில் இருந்து கடலுக்குச்சென்ற சந்தர்ப்பத்தில் பலத்த காற்றினால் சிக்குண்ட மீனவர்கள் 180 பேரும் மியன்மார் கடற்பரப்பில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கலாநிதி டீ.எம்.ஆர்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
31 படகுகளில் கடலுக்கு சென்ற மீனவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். அந்த மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சர்வதேச கடற்பரப்பை அண்மித்த பகுதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே மீனவர்கள் அந்த அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்தாமல் கடலுக்கு செல்வதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment