குளங்கள் உடைக்கும் அபாயம் ,மக்களுக்கு எச்சரிக்கை

குளங்களில் நீர்மட்டம் அதிகரித்துக்கொண்டு வருவதனால், குறித்த குளங்களுக்கு இருமருங்கிலும் வசிக்கும் மக்களை எச்சரிக்கையாக இருக்கும் படி, நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக காலி, களுத்துறை, யக்கலமுல்லை மற்றும் இரணைமடு ஆகிய பிரதேசங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று இரவிலிருந்து வெலிப்பன்னை நுழைவாயில் மற்றும் தெற்கு அதிவேக பாதையின் வெளியேறும் வழியும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இரணைமடு குளம் நிரம்பி வருவதால் சிறிது நாட்களில் குளத்தின் வான் கதவுகள் திறக்க வேண்டி இருப்பதால் வட்டக்கச்சி ,முரசுமோட்டை , கண்டாவளை , வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template