பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலி

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் அந்த இடத்திலேயே உயிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தர்மபுரத்தைச் சேர்ந்த வி. ஜதார்த்தன் (வயது – 24) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார்சைக்கிளில் சென்ற குறித்த இளைஞர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானார் என்று தெரிவிக்கப்படுகிறது.

சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template