ஐ.எஸ்.ஐயை பின்வாங்க வைத்த குர்ஷித் அமைப்பு

அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் குர்திஷ் மக்கள் அதிகமாக வாழும் கோபனி நகரை நோக்கிச்சென்று கொண்டிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் தற்போது பின்வாங்கத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்க விமானத் தாக்கு தல்களைத் தீவிரப்படுத்துவதற்கு முன்னர் அந்த நகரத்தின் 40 வீதத்தை இஸ்லாமிய தீவிரவா திகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்; தாக்குதல்கள் தீவிரமடைந்த பின்னர் நகரின் பெருமளவுக் கட்டுப்பாட்டை இழந்துவிட்டனர் என குர்திஸ் அமைப்புகள் தெரிவிக்கின்றன,


2012இல் சிரியாவிடமிருந்து இந்த நகரத்தை விடுவித்த குர்திஷ் போராளிகள் சுயாட்சியை ஏற்படுத் தினார்கள். அவர்கள் இந்த நக ரத்தை சிரியா குர்திஷ்தானின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர். இந்த அடிப்படையில் கோபனி நகருக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை குர்திஷ் மக்களின் சுதந்திரக் கனவுகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலாகவும் கருதலாம்.


துருக்கியின் சுயநல அரசியலும், அமெரிக்காவின் பலவீனமான இராணுவத் தந்தி ரோபாயமும் இணைந்து கோபனி பாரிய இரத் தக்களறியைச் சந்திக்கக்கூடிய அபாயத்தை உண்டுபண்ணியிருந்தது.

எந்த வேளையிலும் கோபனி பாரிய இனப்படுகொலையைச் சந்திக்கலாம் என்ற அச்சம் கடந்த சில வாரங் களாகக் காணப்பட்டது.
கோபனி சிரியா – துருக்கி எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நகரம். அதன் சிறிய பகுதி சிரியாவுக்குள் துருத்திக்கொண்டுள்ளது.

அயின் அல் அராப் எனவும் அழைக் கப்படும் கோபனியின் சனத்தொகையளவு வெறுமனே 50,000. 1915 இல் ஆர்மீனியாவில் இடம்பெற்ற இனப்படுகொலையிலிருந்து தப்பிய அகதிகள் புகையிரத நிலையத்துக்கு அருகில், சிறிய கிராமமொன்றைக் கண்டுபிடித்தனர்; பின்னர் அருகி லிருந்த குர்தீஷ்களும் அவர்களுடன் இணைந்துகொண்டனர் என கோபனி உருவான விதம் குறித் துத் தெரிவிக்கப்படுகின்றது.

1921இல் துருக்கியினுடனான எல்லை பிரிக்கப்பட்டபோது இந்த நகரம் சிரியாவின் எல்லையில் கைவிடப்பட்டது,
இன்று இந்த நகரம் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் சூழப்பட்ட நிலை யில் பெரும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளது.
அமெரிக்காவின் தந்திரோபாயம் குறித்த கேள்விகள்
கோபனி இஸ்லாமிய தீவிரவாதிகளின் கைகளில் விழும் பட்சத்தில் அது அமெரிக்காவின் விமானத் தாக்குதல் களின் பயன் குறித்த கேள்வியை யும், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக வா´ங் டன் உரு வாக்கி யுள்ள கூட்டணி யின் பலவீனங் கள் குறித்து பல சந்தேகங்களை யும் எழுப்பக் கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.

அமெரிக்கா, கோபனியை நோக்கி நகரும் தீவிரவாதிகளை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்ட போதி லும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஆரம்பத்தில் காணப்பட் டது.ஆகாயத் தாக்குதல்களை மேற் கொள்வது அப்பகுதியில் கடின மான விடயம். அவர்களுடைய ஆட் டிலறிகள் உருமறைப்பு செய்யப்பட் டிருக்கலாம், மேலும் அமெரிக்க விமானங்களை இலகுவில் அவர் கள் அடையாளம் காணக்கூடிய நிலையிலுள்ளனர் எனச் சுட்டிக்காட் டப்படுகிறது.
இதன் காரணமாக அமெரிக்கா தரைப்படைகளைப் பயன்படுத் தவேண்டுமென்ற வாதமும் முனைப்படைந்து வருவதைக் காணமுடிகின்றது.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் செயற்பாடுகளைக் கண்காணித்து உடனடியாக விமானப்படையின ருக்குத் தெரிவிக்கவேண்டியது அவசியம். அவ்வாறு ஒருங் கிணைப்பில்லாததே பாரிய பிரச் சினையாகக் காணப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
பல நாடுகளும் பல நிகழ்ச்சி நிரல்களும் பிராந்தியத்தின் பல நாடுகள் பல நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுவதும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் நகர் வைக்கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதற்கான முக்கிய காரண மாகவுள்ளது. பொதுவான எதிரி காணப்படு கின்ற போதிலும் பொதுவான நலன் என்பதைக் காணமுடியாத நிலையுள்ளது.

மத்திய கிழக்கு என்பது பலவித மான நெருக்கடிகளைத் தன்ன கத்தே கொண்டுள்ள பிராந்தியம். ஏற்கனவே காணப்பட்ட அரச கட்ட மைப்புகள் சிதைந்து கொண்டிருக் கின்றன. ´யா ஈரானுக்கும், சுனி அரேபிய நாடுகளுக்கும் இடையி லான வேற்றுமைகள் போன்ற பலவித நெருக்கடிகளால் அப்பகுதி சூழப்பட்டுள்ளது.
இதில் கோபனிக்கு அச்சுறுத் தலாக அமைந்துள்ள விடயம், துருக் கிக்கும் குர்திஷ் மக்களுக்குமான நீண்டகால நெருக்கடியான உறவாகும்.
துருக்கி தனது எல்லைக்கு மிக அருகில் இடம்பெறும் மோதல் குறித்து எடுத்துள்ள நிலைப்பாடு அதன் இரட்டைவேடத்தைப் புலப் படுத்துகின்றது.துருக்கி, சிரியாவின் அசாத் அரசைக் கடுமையாக எதிர்க் கும் அதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பையும் அச்சுறுத் தலாகக் கருதுகின்றது.அசாத் அரசைப் பலப்படுத்தும் எதனை யும் செய்துவிடக்கூடாது என்பதில் அது உறுதியாகவுள்ளது. குர்திஷ் போராளிகள் குறித்தும் துருக்கி அச்சம் கொண்டுள்ளது. அவர் களை ஆயுத ரீதியாகக் பலப்படுத்து வதை அந்த நாடு விரும்பவில்லை.

எனினும், தற்போது இஸ்லா மிய தீவிரவாதிகள் தமது எல்லைக்கு அருகில் வந்துவிட்ட நிலையில், துருக்கி நடவடிக்கை எடுத்தேயாக வேண்டிய நிலையிலுள்ளது. இதன் காரணமாகவே தனது விமானத்த ளங்களை அமெரிக்கா பயன்படுத் துவதற்கு அது இணங்கியுள்ளது,
இதேவேளை, துருக்கி தமது போராளிகளை எல்லைக்கு அனுப் புவதைத் தடுத்து வருவதாக குர்திஷ் அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின் றன.இதற்கு எதிர்ப்புத் தெரிவிப் பதற்காகவே துருக்கியின் 30 நக ரங்களில் ஆர்ப்பாட்டங்களிலும் வன் முறைகளிலும் குர்தீஷ் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

துருக்கி அரசு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை விட தங்களையே எதிரியாகப் பார்க்கின்றது என்பது குர்தீஷ் மக்களின் கருத்து. எல்லைகளைக் கடந்து சென்று போராளிகளுடன் இணைவதற்கு துருக்கி தங்களை அனுமதிக்காதது குறித்து அவர்கள் கடும் சீற்றமடைந்துள்ளனர்.

கோபனே வீழ்வது, துருக்கி அரசுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய விடயம். அவர்கள் அதனை விரும்புகின்றனர். அதன்மூலம் சிரியாவுக்குள் சுயாதீன பகுதியை ஏற்படுத்தும் குர்திஷ் மக்களின் கனவும் கலைந்து போகும் என அந்த அரசு கருதுகின்றது என்பது குர்தீஷ் மக்களின் வாதம்.இந்தக் கருத்தை உறுதி செய்யும் விதத்தில் துருக்கி ஜனாதிபதியின் இவ்வார கருத்தும் அமைந் துள்ளது. எங்களைப் பொறுத்தவரை குர்திஷ் போராளிகளும், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பும் ஒன்று தான் என அவர் தெரிவித்தார். இரண்டும் வெவ்வேறானவை எனக் கருதுவது தவறு எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கசப்புணர்வுக்குக் காரணமாக உள்ளது துருக்கிய அரசுக்கு துருக்கிய சிறுபான்மையினத்தவருடனான நீண்டகால மோதலாகும். 1980கள் முதல் காணப்படும் குர்திஷ் கிளர்ச்சி காரணமாக 40,0 00இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சமாதான பேச்சுகள் சமீபத்திலேயே ஆரம்பமாகியுள்ளன.இந்நிலையில், சிரியாவிலுள்ள குர்திஷ் குழுவைப் பலப்படுத்துவது, தனது நாட்டிலுள்ள பி.கே.கே அமைப்புக்குச் சாதகமாக அமைந்துவிடும் எனத் துருக்கி கருதுகின்றது. இதன் காரணமாக கோபனியில் பாரிய இனப் படுகொலையையும் வேடிக்கை பார்ப்பதற்கு அது தயாராகவுள்ளது.

Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template