பாதுகாப்பு அமைச்சின் தடை அதிருப்தியில் மேற்குலகம்!

வடக்கு செல்லும் வெளி நாட்டவர் தமது அனுமதி யைப்பெற்றுத்தான் அங்கு செல்லவேண்டும் என்று பாது காப்பு அமைச்சு விடுத்திருக்கும் அறிவிப்பால் மேற்குலக நாடுகள் அதிருப்தியடைந்துள் ளன என்று மாற்றுக் கொள்கைக ளுக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கிய சோதி சரவணமுத்து தெரிவித்தார்.

வெளிநாட்டவர் வடக்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள தடை குறித்து கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு,
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப் பட்டு 5 வருடங்கள் கடந்துள்ள நிலை யில், பாதுகாப்பு அமைச்சு இவ்வாறான தொரு நடவடிக்கையை எடுத்துள் ளமை புதுமையாக உள்ளது. இலங் கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சு றுத்தல் இருக்கின்றதா என்று மேற்குல கத்தினர் கேள்வி எழுப்புகின்றனர். அரசின் இந்த நடவடிக்கையானது மேற் குலக நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

யுத்தத்தின் பின்னர் இலங்கையின் சுற்றுலாத்துறை முன்னேற்றம் கண்டு வருகின்றது. இவ்வாறான நிலையில், வடக்கு செல்லும் வெளிநாட்டவர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் தான் அங்கு செல்ல வேண்டும் என்று அரசு அறிவித்திருப்பது சரியானதல்ல. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கைக்கு சுற்றுலா செல்ல தாம் தயார். ஆனால், பாதுகாப்பு அமைச் சின் அனுமதியைப் பெற்றுத்தான் வடக்கு செல்லவேண்டும் என்பது தமக்கு விருப்பமில்லை என்று மேற்குலகத்தி னர் கூறுகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சு விடுத்திருக் கும் தடைக்கமைய, வடக்கிலுள்ள தமது உறவுகளைப் பார்க்கவரும், வெளிநாட்டவர்களும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுத்தான் அங்கு செல்லவேண்டும். தமது உறவுகளைக்கூட சுதந்திரமாக சென்று பார்க்க முடியாத அவல நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அனுமதிக்க முடியாது -என்றார்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template