அச்சுவேலியில் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த குடும்பஸ்தர் கைது!



குட்டியப்புலம், செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஓகஸ்ட் மாதம் சந்தேகநபரின் வீட்டுக்கு அருகில் வசித்து வரும் 13 வயது சிறுமிக்கு கொப்பி, பென்சில்கள் தருவதாக ஆசை வார்த்தை கூறி அருகில் உள்ள தோட்டத்துக்குள் கூட்டி சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருந்தார்.

தனக்கு நடந்தவற்றை சிறுமி பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, அப்பகுதி கிராம சேவையாளர் தெல்லிப்பழை பிரதேச நன்னடத்தை உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியிருந்தார். இது தொடர்பில் நன்னடத்தை உத்தியோகத்தர் கடந்த 26ஆம் திகதி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் யாழ்.பெண்கள் சிறுவர் நீதிமன்ற நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து, சந்தேக நபரை கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார். சந்தேகநபரை  வெள்ளிக்கிழமை செல்வநாகபுரம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டு, நேற்று முன்தினம் சிறுவர் நீதிமன்ற நீதிவான் ஜீவராணி கறுப்பையாவின் வாசஸ்தலத்தில் முற்படுத்தியவேளை சந்தேகநபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் குடும்பஸ்தர் ஒருவரை அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸார்  வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template