அரச உழியர்களுக்கு கையளிப்பதற்காக யாழில் வந்திறங்கியது மோட்டார் சைக்கிள்கள்!

 யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ். மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் கடமையாற்றும் களப் பணியில் ஈடுபடும் 2000 ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை 13 ஆம் திகதி வழங்கி வைக்கவுள்ளார்.

இதில் பெண்களுக்கு Pleasure பிளெஸ்ஸர் மோட்டார் சைக்கிளும் ஆண்களுக்கு (Discover டிஸ்கவர் 125) மோட்டார் சைக்கிள்கள் யாழ்ப்பாணம் கொண்டுவ ரப்பட்டுள்ளது.

நேற்று 350 டிஸ்கவர் (Discover ) மோட்டார் சைக்கிள்கள் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளது. இன்று 1000 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுவரப்படவுள்ளது.

பெண்களுக்காக pleasure மோட்டார் சைக்கிள்கள் நாவற்குழி உணவுக்களஞ்சிய சாலையில் கொண்டு வந்து இறக்கப்பட்டு மோட்டார் சைக்கள்களுக்கான உதிரிப்பாகங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன



Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template