திருவையாறு பகுதியில் மோட்டார் சைக்கிள் வேலியுடன் மோதி விபத்து சிறுவன் படுகாயம்

மோட்டார் சைக்கிள் வேலி கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் அதே இடத்தினைச் சேர்ந்த 16 வயதுடைய சி.நிலக்ஷன் என்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

அயல் வீட்டு பாடசாலை மாணவரை பாடசாலையில் இறக்கிவிட்டு வீடு திரும்பும் போது, இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template