தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்று கூறப்பட்டு கடந்த ஏப்ரல் மாதத்தில் அநுராதபுரம் பதவிய காட்டுப்பகுதியில் வைத்து சுட்டுக்கொலைச் செய்யப்பட்ட கோபி என்றழைக்கப்படும் கஜீபனின் மனைவியான கஜீபன் சர்மிளா, நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.
அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சுவிட்ஸர்லாந்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை செல்லவிருந்தார்.
சுவிட்ஸர்லாந்துக்கு செல்வதற்கான விஸாவை அவர் வைத்திருந்தபோதும் அவரது கணவர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதனால் அவருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment