மெக்சிகோவில், 1,721 கார்கள் பங்கேற்ற அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இது, புதிய உலக சாதனையாகக் கருதப்படுகிறது. மெக்சிகோ நகரில் நேற்று நடைபெற்ற, கார்கள் அணிவகுப்பு நிகழ்ச்சியில், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த விலை உயர்ந்த மற்றும் அதிநவீன கார்கள் இடம் பெற்றன. 5.1 கி.மீ., தூரத்திற்கு வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கார்கள், வரிசையாக நகர்ந்து சென்ற காட்சி, எறும்புகள் ஊர்ந்து செல்வது போல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக, பார்வையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதுவரை இல்லாத வகையில், அதிகப்படியான கார்கள் இடம் பெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சி என்ற பெருமையை பெற்று, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இதற்கு முன், 2002ல், நெதர்லாந்தில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில், 948 வாகனங்கள் பங்கேற்றதே அதிகபட்ச சாதனையாக இருந்தது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியை, 2.5 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment