ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான நீதியான – நியாயமான விடயங்களை ஆராய்ந்து அந்நாட்டு சட்டங்களுக்கு அமைவாக தடையை நீக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழர் தாயகப் பகுதியில் நில அபகரித்து மக்களுடைய பண்பாட்டு விழுமியங்களை சிதைத்து இருப்பையும் தனித்துவமான அடையாளங்களையும் சிதைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிரான அகிம்சைப் போராட்டம் திட்டமிட்டபடி தைத்திங்கள் நாளில் நடைபெறும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாடு நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், போருக்கு முன்னர் தமிழரசுக் கட்சியின் மகாநாடு நடைபெற்றதைப் போல போர் முடிந்து 5 வருடங்களின் பின்னரும் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. கடந்த 60 ஆண்டுகளை விட ஆயுதப் போராட்டம் முடிவுற்றதாக மகிந்த அரசினால் அறவிக்கப்பட்டு 5 ஆண்டுக்குள் அரசினால் பௌத்த தீவிர வாத சக்திகளாலும் தமிழர் தாயகப்பகுதியில் உள்ள நிலம், இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் என்பன சீர்குலைக்கப்பட்டுள்ளன.
எனவே வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களுடைய நிலங்களை அபகரித்து தமிழ் மக்களுடைய பண்பாட்டு விழுமியங்களை சிதைத்தும் தமிழ் இனத்தின் இருப்பையும் அடையாளங்களையும் சிதைக்கும் நடவடிக்கைக்கும் எதிராக அகிம்சை வழிப்போராட்டம் தைத்திங்களில் நடைபெறும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு , சிங்கள முற்போக்கு சக்திகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கிராமங்கள் தோறும் மக்கள் சந்திப்புக்களை நடாத்தி மக்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் மகிந்த தேர்தலில் வெல்ல வேண்டும் என்றோ அல்லது தோற்க வேண்டும் என்றோ தீர்மானங்கள் எடுக்கவில்லை. எமது மக்கள் தமிழர்களாக அவர்களுக்கு உரிய அதிகாரங்களுடன் வாழ வேண்டும் என்று தான் எமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். ஆயுதப்போராட்டம் களத்தில் தோற்றுவிடலாம் ஆனால் அகிம்சைப் போராட்டம் ஒரு போதும் தோற்காது என அவர் மேலும் தெரிவித்தார்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment