மூதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திருட்டு

திருகோணமலை மூதூர் – பாலத்தடிச்சேனை நாகதம்பிரான் ஆலயத்தின் நீரிறைக்கும் இயந்திரம் திருடப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்படாத சிலரால் நேற்றிரவு நீர் இறைக்கும் இயந்திரம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஆலயத்திலுள்ள சில பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இன்று முற்பகல் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மூதூர் பொலிஸார் கூறினர்.

மூதூர் பாலத்தடிச்சேனை பகுதியிலுள்ள மற்றுமொரு ஆலயத்தில் அடையாளம் காணப்படாதவர்களால் இரண்டு தினங்களுக்கு முன்னர், பிள்ளையார் சிலை  உடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template