இன்றைய ஜாமின் மனு விசாரணையில் , உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி ஜெ., வுக்கு ஜாமின் வழங்குங்கள் ; என பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி தனது வாதுரையில் எடுத்துரைத்தார். தொடர்ந்து அவர் வாதிடுகையில், இந்த வழக்கில் சாட்சிகள் ஜெ.,வுக்கு ஆதரவாகத்தான் சாட்சியம் அளித்துள்ளனர். ஆனால் சிறப்பு கோர்ட் நீதிபதி அளித்த தீர்ப்பு தவறானது. ஊழல் தடுப்பு சட்டத்தின் படி முறையான விசாரணை நடக்கவில்லை.
ஜெ.,தரப்பில் உள்ள ஆதாரங்களை சரியாக வழங்காமல் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பை நிறுத்தி வையுங்கள். ஜாமின் உடடியாக வழங்குங்கள் . இவருக்கு ஜாமின் வழங்காத பட்சத்தில் தமிழகத்தில் பதட்டம் நீடிக்கும். ஜெ.,வுக்கு ஆயுள் தண்டனையோ, மரணத்தண்டனையோ விதிக்கப்படவில்லை. இவர் உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இதனால் ஜாமின் வழங்குவதில் தவறு இல்லை. இது போன்ற வழக்கில் சிறை தண்டனை பெற்ற லாலு பிரசாத்துக்கு வழங்கியது போல் ஜெ.,வுக்கு ஜாமின் வழங்கலாம். என பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டினார். ஜெத்மலானி ஒரு மணி நேரம் வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானிசிங், தனது வாதுரையில், மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெ., பல கோடி சொத்துக்களை குவித்துள்ளார். இது சட்டப்படி குற்றம் ஆகும். இது தொடர்பாக குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. இவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டால் சாட்சியங்களை கலைப்பதுடன் , அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்துவார். எனவே இவரை ஜாமினில் விடுவிக்க முடியாது.
இதற்கு குறுக்கிட்ட ஜெத்மலானி, 17 ஆண்டுகள் வழக்கு நடந்துள்ளது. இதுவரை அவர் எந்தவொரு தவறான வழியிலும் ஈடுபடவில்லை. 2 முறை முதல்வராக இருந்துள்ளார். எங்கும் ஓடவில்லை. அரசியல் சூழ்ச்சி காரணமாக வழக்கு போடப்பட்டுள்ளது. என்றார்.
மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் நீதிமன்றம் கூடி விசாரணை நடத்தபோது, ஜெயலலிதாவை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கலாம் என்று பவானிசிங் வாதிட்டார்.
நீதி மன்றம் உள்ளபகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப் பட்டுள்ளனர்.
தமிழகமெங்கும் பதட்டமாய் உள்ளது , பல கடைகள் பூட்டி உள்ளன,
தனியார் பேருந்துகள் பல தமது சேவையை ரத்து செய்துள்ளது,
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள லங்காNN உடன் இணைந்திருங்கள்.

.jpg)
.jpg)

.jpg)

Post a Comment