வயிற்றுவலி என வந்த பெண் வைத்தியசாலையில் உயிரிழப்பு; மரணத்தில் சந்தேகம்

திருகோணமலை ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வயிற்றுவலியால் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய குறித்த பெண் அலவத்துகொட பகுதியிலுள்ள தமது உறவினர்களின் வீட்டுக்கு சென்றிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பதாக தனியார் சிகிச்சை நிலையமொன்றில் வயிற்றுவலிக்காக இவர் மருந்து பெற்றிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் வயிற்று வலி அதிகரித்ததை அடுத்து, கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் வகையில் இன்று பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது.

கருக்கலைப்பினால் இவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கண்டி வைத்தியசாலையின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template