1500 face book கணக்குகளை முடக்கிய இலங்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் சுமார் ஆயிரத்து 500 போலி பேஸ்புக் கணக்குகளை முடக்கியுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

போலி கணக்குகள் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் பேஸ்புக் நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படுவதாக ஒன்றியத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியிய லாளர் ரொஷான் சந்திரகுப்தஅறிவித்துள்ளார்.

இதற்கமைய அந்த நிறுவனத்தி னால் போலி பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இணையத்தளங் கள் தொடர்பாக இந்த வருடம் 1,800 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதில் அநேகமானவை போலி பேஸ்புக் கணக்குகளுடன் தொடர்பு பட்டு காணப்படுவதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் கூறியுள்ளார்.

போலி பேஸ்புக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தொடர்பில் 0112 691 692 என்ற தொலைபேசி இலக்கத் துடன் தொடர்பினை ஏற்படுத்தி முறைப் பாடு செய்ய முடியும் என அறிவிக் கப்பட்டுள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template