நமது ஊரைப் பொறுத்தவரையில் ஒரு ஹீரோயினுக்கு திருமணப் பேச்சு பற்றிய கேள்வி எழுந்துவிட்டாலே ரசிகர்களிடம் இமேஜ் குறைந்துவிடும். திருமணம் ஆன பின் கேட்கவே வேண்டாம், அவர்களை தப்பித் தவறிக் கூட ஹீரோயினாக நடிக்கக் கூப்பிட மாட்டார்கள், அக்கா, அண்ணி, இல்லையென்றால் அம்மா வேடத்திற்குக் கூட கூப்பிட ஆரம்பித்துவிடுவார்கள்.
அப்படி ஒரு நிலைமைதான் தற்போது அனுஷ்காவுக்கு. கடந்த சில வாரங்களகாவே மீடியாக்களில் அவரது திருமணம் பற்றிய செய்திகள் அதிகம் வெளிவந்தன. அதிலும் சில தெலுங்குத் தொலைக்காட்சிகள் அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து அனுஷ்காவின் திருமணம் பற்றிய செய்தியை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டினார்களாம். இதனால் மீடியாக்கள் மீது அனுஷ்கா கடும் கோபத்தில் இருக்கிறார் என்கிறார்கள். தனது திருமணத்தைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிடும் படியும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.
தற்போது நடிக்கும் படங்களுக்குப் பிறகு திருமணம் என்று வந்த செய்திகளை மறுத்து சொல்லிவிட்ட பிறகும் சிலர் தொடர்ந்து எழுதி வருவதுதான் அவரைக் கோபத்திற்குள்ளாக்கியிருக்கிறது என்கிறார்கள். இன்னும் சில வருடத்திற்கு அவர் திருமணம் பற்றிப் பேசத் தயாராக இல்லை என அவருடைய நெருங்கிய வட்டாரத்தில் சொல்கிறார்களாம்.

.jpg)
.jpg)

.jpg)

Post a Comment