என்னைப்பற்றி வெளியான காதல் செய்தி ஒரு கட்டுக்கதை! இலியானா

தமிழில், கேடி படத்தில் அறிமுகமானவர் இலியானா. இதே படத்தில்தான் தமன்னாவும் அறிமுகமானவர். மும்பையில் இருந்து தமிழுக்கு இறக்குமதியான இந்த இரண்டு பேரில் தமன்னாவுக்கு தொடர்ந்து தமிழில் படங்கள கிடைத்ததால் இங்கேயே தங்கி விட்டார். ஆனால் இலியானாவுக்கு ஆந்திரா சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது. அதனால் ஐதராபாத்தில் முகாமிட்டு நடித்து வந்தார்.



இந்தநிலையில், பல வருடங்களுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில், விஜய் நடித்த நண்பன் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதைத் தொடர்ந்து இந்திக்கு சென்று விட்ட இலியானா, இப்போது அங்கு அசின் இடத்தை பிடித்து வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் அவரது வளர்ச்சிக்கேற்ப அவரைப்பற்றிய ஒரு காதல் செய்தியும் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.


ஆனால், இந்த செய்தியை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் இருந்து வந்த இலியானா இப்போது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஆண்ட்ரூ என்ற போட்டோகிராபரை நான் கதலிப்பதாக செய்தி பரப்பி வருகிறார்கள. 

ஆனால். நாங்கள் இருவரும் நிஜத்தில் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் நல்ல புரிதல் இருப்பதால் நீண்ட காலமாக நண்பர்களாக இருக்கிறோம். மேலும், அவருக்கும், எனக்கும் 15 வயது வித்தியாசம். அப்படியிருக்க அவரைப்போய் 26 வயது பெண்ணான நான் எப்படி காதலிப்பேன். கட்டுக்கதை விடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் இலியானா,

Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template