நாங்கள் தமிழ் இனத்தின் காவல் நாய்கள் தான்,.சிவாஜிலிங்கம்

தமிழ் மக்கள் ஒரு போதும் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள், தமக்கு ஆதரவாக தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என அரசாங்கம் பகல் கனவு காணக்கூடாது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்குக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி எம்மை வைக்கோல் பட்டடை நாய்கள் என கூறியுள்ளார்.

நாங்கள் தமிழ் இனத்தின் காவல் நாய்கள் தான். தமிழ் மக்களின் பாதுகாப்புக்காக நாங்கள் நாயாக உழைப்போம். தமிழ் மக்கள் தான் எங்கள் எஜமான், அந்த எஜமாங்களுக்கு நாங்கள் என்றும் விசுவாசமாக இருப்போம்.

வடமாகாண முதலமைச்சருக்கு பிள்ளையார் சிலை கொடுத்த ஜனாதிபதி வலி.வடக்கு மையிலிட்டியில் பிள்ளையார் ஆலயம் இடித்தழிக்கப்படுவதை தடுக்காது உள்ளார். எங்கள் மீது சில தமிழ் மக்களுக்கு அதிருப்தி இருந்தாலும் அவர்கள் ஒரு போதும் அரசாங்கத்திற்கு சார்பாக வாக்களிக்க மாட்டார்கள். இனிவரும் தேர்தலிகளில் தமிழ் மக்கள் தமக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என அரசாங்கம் பகல் கனவு காணக்கூடாது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு தரவள்ளதுடன் சர்வதேச மத்தியஸ்தத்தை விரும்புவர்களுக்கே நாம் எமது ஆதரவை வழங்குவோம்.

எமது ஆதரவினை பகிரங்கமாக வழங்க முடியாது. ஏனெனில் சிங்கள பேரினவாதிகள் நாம் ஆதரவு வழங்குபவர்களுக்கு புலிச்சாயம் பூசி அவர்களை புலியாக சித்தரித்து விடுவார்கள். என தெரிவித்தார்.

இதேவேளை யாழ். தேவி புகையிரத சேவை காங்கேசன்துறை வரை விஸ்தரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. தமிழ் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படாத இடத்திற்கு எதற்காக புகையிரத சேவை? அங்குள்ள இராணுவத்தினரின் நன்மைக்ககவா? இராணுவ நன்மைக்காக புகையிரத சேவையை நடத்த நாம் அனுமதிக்க மாட்டோம்.

எனவே மக்கள் மீள்குடியேறிய பகுதிவரை புகையிரத சேவை நடாத்தப்பட வேண்டும், இல்லை புகையிரத சேவை நடைபெறவுள்ள பகுதி மட்டும் மக்கள் மீள் குடியேற்றப்பட வேண்டும்.

அவ்வாறு இல்லாவிடின் நாம் மக்கள் மக்கள் குடியேறிய பகுதியை தாண்டி புகையிரதம் செல்ல அனுமதிக்காது தண்டவாளத்தின் குறுக்கே நின்று போராட்டம் நடாத்துவோம்.

அத்துடன் காங்கேசன் துறை துறைமுகம், பலாலி விமான நிலையம், என்பவற்றை இராணுவ துறைமுகம் இராணுவ விமான நிலையமாக இல்லாமல் சிவில் துறைமுகம் சிவில் விமான நிலையமாக மாற்றப்பட வேண்டும்.

இவற்றின் விஸ்தரிப்புக்கு உதவும் இந்திய அரசாங்கம் இவை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template