நேற்று மாலை செல்வபுரத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான நடராசா வசந்தன் என்பவரை, குடும்ப தகராறு காரணமாக விசாரணை மேற்கொள்வதற்கு பொலிஸார், அழைத்து செல்ல முற்பட்டனர்.
அதன்போது அவர்களிடம் இருந்து தப்பித்த, குறித்த நபர் மின்கம்பத்தில் ஏறி இருந்து கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளார்.
அதனை அடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் தற்கொலை முயற்சியை கைவிட்டு கீழே இறங்கி வருமாறு கோரியுள்ளனர்.
அச் சமயம் அங்கு வந்த இராணுவத்தினர் அவருடன் சமரச பேச்சுக்களை நடாத்தி எவ்வித பாதிப்பும் இல்லாமல் கீழே இறக்கினர்.
பின்னர் சந்தேகநபரை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.


.jpg)
.jpg)

.jpg)






Post a Comment