ஆண்ட்ரியாவின் முத்தத்தால் மனமுடைந்த அனிரூத்

3 என்ற படத்தில் இசையமைப்பாளரான அனிருத், அந்த படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற அதிரடியான ஒரு மெகா ஹிட் பாடலை கொடுத்தார்.

அதனால் ஒரே பாட்டில் உலகப்புகழ் பெற்றார். அப்படி அவர் ஆரவாரத்துடன் வளர்ந்து வந்த அதேநேரத்தில், நடிகை ஆண்ட்ரியாவுடனான உதட்டு முத்தத்தில் அவர் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தின.

அதனால், அதையடுத்து சில நாட்களாக மனசுடைந்து போன அனிருத், தனது அறையே கதியென்று கிடந்திருக்கிறார். அப்போது அவரது பெற்றோர்தான் இன்டர்நெட் யுகத்தில் இதெல்லாம் சாதாரண விசயம். நாளைக்கு இதைவிட இன்னொரு சர்ச்சை வரும்போது உனது பிரச்சினை காணாமல் போய் விடும் என்று அவரை தேற்றினார்களாம்.

ஆக, பெற்றோரின் அரவணைப்பினால் அந்த முத்த சர்ச்சையிலிருந்து மெல்ல மெல்ல வெளியே வந்திருக்கிறார் அனிருத். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரே படத்தில் கொலவெறி வைரல் என்று இணையதளம் மூலமாக நான் பிரபலமானேன்.

ஆனால் அந்த இணையதளமே எனது இமேஜை காலி பண்ணிடுச்சு. அதனால் ரொம்பவே குழம்பிப்போய் விட்டேன். ஆனால் பின்னர் கடவுள் அருளால் அதிலிருந்து முழுசாக மீண்டும் வெளியே வந்தேன்.

எதிர்நீச்சல், மான்கராத்தே என்று அடுத்தடுத்து மெகா ஹிட் கொடுத்த நான் இப்போது விஜய்யின் கத்தி படத்துக்கும் இசையமைத்து விட்டேன்.. அந்த வகையில் இப்போது ரொம்ப சந்தோசமாகவும், உற்சாகமாகவும் எனது இசைப்பயணம் சென்று கொண்டிருககிறது என்கிறார் அனிருத்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template