புனரமைக்கப்பட்ட கொழும்பு 15- காக்கைத்தீவு வீட்டுத் தொகுதி இன்று (17) மாலை 3.00 மணிக்கு நிர்மாணத்துறை- பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவங்சவினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
மஹிந்த சிந்தனையின் தூரநோக்கு தேசிய திட்டத்தின் கீழ் அமைச்சர் விமல் வீரவங்சவின் வழிகாட்டலில் நகமு புவரவர 'நகரத்தை உயர்த்வோம்' திட்டத்தின் கீழ் இவ்வீட்டுத் தொகுதி அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.1981ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இவ்வீட்டுத் தொகுதி 353 வீடுகளைக் கொண்டது.
மிகவும் சிதைவடைந்த நிலையில் இருந்த மக்கள் மண்டபம்- விளையாட்டு மைதானம் மற்றும் சிறுவர் பூங்கா என்பனவும் இத்திட்டத்தின் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.பத்து மில்லியன் ரூபா செலவில் அரசாங்க பொறியில் சேவைகள் கூட்டுத்தாபனம் மற்றும் கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரச்சபை ஆகிய இணைந்து ஆகியன இணைந்து இப்புணரமைப்புப் பணிகளை முன்னெடுத்துள்ளன.
இந்நிகழ்வில் நகர விவகார சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌஸி- நிர்மாணத்துறை- பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் பிரதி அமைச்சர் லசந்த அலகியவன்ன- முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா- மேல்மாகாணசபை உறுப்பினர்கள் ரோஜர் செனவிரத்ன- ஹிருணிக்கா பிரேமசந்திர- கொழும்பு நகரசபை உறுப்பினர் மொஹம்மட் முஸம்மில்- நிர்மாணத்துறை- பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சின் செயலாளர் பி.எச்.எல். விமலசிறி பெரேரா- ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment